மதுரை: திருச்சி கோட்டத்தில் நடைபெறும் ரயில்வே பாதை பராமரிப்பு பணி காரணமாக புதன்கிழமை பிப்ரவரி 21 அன்று மதுரை- சென்னை தேஜாஸ் ரயில் தாமதமாக வருகிறது.
எனவே புதன்கிழமை அன்று மதுரையிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை சென்னை தேஜாஸ் ரயில் (22672) 1-மணி நேரம் தாமதமாக மாலை 4 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.