மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் கைதான டிடிஎப் வாசன் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் இறுதி நாளான இன்று வழக்கறிஞருடன் வந்து கையெழுத்திட்டார்.
இன்று அவரது ரசிகர் ஒருவர் கேக் ஒன்றை கொண்டு வந்து 20 நாட்களில் உங்கள் பிறந்த நாள் வருகிறது அண்ணா இன்று மதுரையில் கொண்டாடுவோம் என கூறினார் வழக்கறிஞர்கள் அனுமதி பெற்று கேக்கை வெட்டி தன் ரசிகர்களுக்கு ஊட்டி விட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
இதைத் தொடர்ந்து அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் பின்னர் அவர்களிடம் இருந்து விடை பெற்று டிடிஎப் வாசன் புறப்பட்டுச் சென்றார்.