தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

84பார்த்தது
தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
தாம்பரம் திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தாம்பரம்-திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (06035): வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) சென்றடையும். 

இந்நிலையில் வரும் ஜூன் 13ம் தேதி வரை இச்சேவை இயக்கப்படும் எனவும், திருவனந்தபுரம்-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06036): ஞாயிற்றுக்கிழமைகளில், திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ரயில்வே நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலையில் தாம்பரம் சென்றடையும். இந்த சேவை ஜூன் 15ம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி