மத்திய சிறையில் சீர்வரிசை பொருட்கள் சிறப்பு விற்பனை

83பார்த்தது
மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறை சந்தையில் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிதாக துவக்கப்பட்ட பர்னிச்சர் டிவிஷன் மூலமாக கட்டில் பீரோ டைனிங் டேபிள் சோபா ஆகியவை மரம் மற்றும் இரும்பில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் தனது மகளின் திருமணத்திற்கு தேக்கு மரத்தில் திருமண சீர்வரிசை பொருட்கள் தயார் செய்து தருமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் இங்கு சிறைவாசிகள் மூலமாக நேர்த்தியாக தேக்கு மரத்தில் ஆன கட்டில் , பீரோ, டைனிங் டேபிள், சோபா, டீ பாய், ஆகியவை குறைந்த விலையில் அவர்களின் விருப்பத்தின் வடிவமைப்பில் தயார் செய்யப்பட்டு இன்று சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் மூலமாக வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி