மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி. கே. வாசன்

53பார்த்தது
மதுரையில் செய்தியாளர்களிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி. கே. வாசன் கூறுகையில் "2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, தமிழகத்தில் உள்ள 50 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள உள்ளேன், நிதி அயோக் கூட்டம் மிக முக்கியமான கூட்டமாகும், நிதி அயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளாமல் கடமை தவறி உள்ளார், சமூக வலைத்தளங்களில் முதல்வர் பேசுவதை விட கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று இருக்க வேண்டும், நிதி அயோக் கூட்டத்தில் அரசியல் காரணங்களுக்காக பங்கேற்க்கவில்லை, தமிழர்களின் நலன் சார்ந்த உரிமைக்காக முதல்வர் நேரில் சென்று இருக்க வேண்டும், டெல்லிக்கு போகாமல் அறிக்கை கொடுத்து விட்டு சும்மா இருக்கலாமா? , நிதி அயோக் கூட்டத்தில் முதல்வர் நேரில் அமர்ந்து மக்களின் உரிமைகளுக்காக பேசி இருக்க வேண்டும், இன்று பீகாருக்கு நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு நாளை தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, மற்றான் தாய் மனபான்மை அல்லாமல் தமிழகத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என கூறினார்

தொடர்புடைய செய்தி