சிறுதொழில் மானிய கடன் வசதி முகாம்

581பார்த்தது
சிறுதொழில் மானிய கடன் வசதி முகாம்
சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்க, அரசு உத்தரவாதத்துடன் கூடிய மானிய கடனுதவி முகாமை மாவட்ட தொழில் மையம் இன்று(பிப். , 23) நடத்துகிறது.

மதுரை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10: 30 மணிக்கு நடக்கும் இம்முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள், பிற வங்கி மேலாளர்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்று உடனே கடன் தொகை விடுவிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளன. புதிதாக கடனுதவி கோரி விண்ணப்பிக்க உள்ளோரும், ஏற்கனவே விண்ணப்பித்து கடன் விடுவிப்பு ஆணையை எதிர்நோக்கி உள்ளவர்களும் அதில் பங்கேற்று பயன்பெறலாம்.

எனவே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் மானிய கடனுதவிக்கு விண்ணப்பித்தோர் இதில் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி