பட்டா கத்தியுடன் பதுங்கி இருந்த ஆறு பேர் கைது

1970பார்த்தது
பாண்டி கோவில் பகுதியில் பட்டா கத்தியுடன் பதுங்கி இருந்த ஆறு பேர் கைது. மதுரை மாவட்டம் அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாண்டி கோவில் பகுதியில் உள்ள அம்மா திடல் பகுதியில் பட்டாக்கத்தியுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வகையில் அமர்ந்திருந்த கரும்பாலை பகுதியைச் சேர்ந்த திருப்பதி , கார்த்திக் , தினேஷ் , சரவணன் , அஜித்குமார் உட்பட ஆறு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மிளகாய் பொடி, பட்டாக்கத்தி , அரிவாள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை பறிமுதல் செய்து அண்ணாநகர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி