தனியார் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் சிபு பேட்டி

55பார்த்தது
தனியார் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் சிபு பேட்டி
மதுரை குட் ஷெட் தெருவில் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ மனையை மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை தாளாளர்
மருத்துவர் கே. பி. ரெட்டி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மருத்துவமனை திறப்பு விழாவில் முதன்மை தலைமை இயக்குனர் முருகேசன் , மருத்துவ இயக்குனர் சிபு வர்க்கீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருத்துவ இயக்குனர் சிபு வர்க்கீ செய்தியாளர்களிடம் பேசும்போது

மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனையின் 50-வது கிளை இன்று மதுரை ஆரம்பித்துள்ளதாகவும்
கடந்த வருடம் தமிழ்நாடு அரசுடன் வெளிச்சம் என்ற திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் 100 கண் மருத்துவமனைகள் ஆரம்பிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் 50 சதவீதம் பெரிய கண் மருத்துவமனையும், 50 சதவீதம் சிட்டி சென்டர் (பார்வை மையம்) ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட இன்சூரன்ஸ் திட்டங்களிலும் கண் மருத்துவம் பார்ப்பதாகவும் கூறினார்.
கன்புரை, நீர் அழுத்தம், மார்க்கண், விழித்திரை பாதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட எல்லா கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் தமிழக அரசின் வெளிச்சம் திட்டத்தின் கீழ் மருத்துவம் பார்த்து வருவதாகவும் கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி