100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில், மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என ஒவ்வொரு பகுதிகளிலும் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் மதுரை மஞ்ணக்காரகாரா தெரு பகுதியில் செயல்படும் சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அறிவியல் சார்ந்து எந்த ஒரு நிகழ்வுகளாக இருந்தாலும் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வண்ணம் தத்ரூபமாகவே அவர்களுக்கு செய்முறை விளக்கம் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கற்பித்து வரக்கூடிய நிலையில் நேற்று
உலகமே எதிர்பார்க்கக்கூடிய சுனிதா வில்லியமிஸ் மற்றும் அவரது குழுவினர் உடைய பூமி வருகை தந்தனர்.
இதை மையமாகக் கொண்டு ஆசிரியர்கள் முறையான பயிற்சி மாணவர்களுக்கு கொடுத்து மாணவர்கள் அதை செய்முறை விளக்கமாக செய்த வீடியோ காட்சிகள் தற்போது பேசு பொருளாக இருக்கிறது. குறிப்பாக, 9 மாதங்களுக்கு பின் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரையும் வரவேற்கும் விதமாக அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலிலியோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சி. வி. ராமன் உள்ளிட்ட அறிவியல் விஞ்ஞானிகள் போல் முகமூடி அணிந்து வரவேற்றனர்.
பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுடைய இந்த அசாத்திய திறமை பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.