ரூ. 6 கோடி சொத்து வரி வருவாய் அதிகரிப்பு

72பார்த்தது
ரூ. 6 கோடி சொத்து வரி வருவாய் அதிகரிப்பு
மதுரை மாநகராட்சி பகுதியில் புதிய கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்துவரி வசூலிப்பில் அதிகாரிகள் 'கறார்' காட்டியதால் கைமேல் பலன் அளிக்கும் வகையில் மூன்று மாதங்களில் சொத்துவரி வருவாய் ரூ. 6 கோடி அதிகரித்துள்ளது. மாநகராட்சிக்கு சொத்து வரி பிரதான வருவாய் இனமாகும்.

புதிய கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட இவ்வரியை வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. விண்ணப்பம் செய்தும் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்யாமல் இருந்ததும் தெரியவந்தது. சில கட்டடங்களில் சதுர அடிகளை மறைத்தும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இதுகுறித்த தகவல் கமிஷனர் தினேஷ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 'புதிய கட்டடங்களுக்கு 30 நாட்களில் வரி நிர்ணயம் செய்து வசூலிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்' என உதவி வருவாய் அலுவலர், பில் கலெக்டர்களுக்கு கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் முதல் தற்போது வரை வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டதால் மாநகராட்சியின் ஆண்டு சொத்து வருவாய் மூன்று மாதங்களில் ரூ. 6 கோடியாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி