கால்வாய்க்குள் தவறி விழுந்த பசு மீட்பு

74பார்த்தது
கால்வாய்க்குள் தவறி விழுந்த பசு மீட்பு
கால்வாய்க்குள் தவறி விழுந்த பசு மீட்பு

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அவ்வப்போது சாலை விபத்துகள் நடைபெற்று வருவதாக தொடா்ந்து புகாா்கள் எழுகின்றன.

இந்த நிலையில், மதுரை தபால் தந்தி நகா் பாா்க் டவுன் பகுதி வழியாகச் செல்லும் நீா்வரத்து கால்வாய்க்குள் அந்த வழியாகச் சென்ற பசு தவறி விழுந்தது. கால்வாய் 5 அடி ஆழத்துக்கும் மேல் இருந்ததால், பசுவால் கால்வாயிலிருந்து வெளியேற முடியவில்லை.

தகவலறிந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு வீரா்கள் பசுவை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி மீட்டனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி