மதுரை நீர்வரத்து கால்வாயில் தவறி விழுந்த பசு மாடு: நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு.!!
மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது விபத்துக்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வந்த நிலையில் மாநகராட்சி சார்பாக கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை மாநகர் பார்க் டவுன் பகுதியில் அந்த வழியாக சென்ற பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக தவறி கழிவுநீர் கால்வாயில் விழுந்துள்ளது.
5 அடிக்கு மேல் பள்ளம் இருந்த காரணமாக மேலே வர முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக உள்ளே கத்திக் கொண்டிருந்ததால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சம்பவத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை மீட்டனர்.