மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கோச்சடை பகுதியில் அமைந்துள்ள மயானம் முறையாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று 5 லட்ச ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த புள்ளியை வெளியிட்டுள்ளது.
இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.