ரயில்வே கடவுப்பாதை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம்

76பார்த்தது
ரயில்வே கடவுப்பாதை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம்
ரயில்வே கடவுப்பாதை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே கடவுப் பாதை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.


ஜூன் 6-ஆம் தேதி சா்வதேச ரயில்வே கடவுப் பாதை பாதுகாப்பு விழிப்புணா்வு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் கடவுப் பாதை பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா பிரசார வாகனத்தின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். கோட்ட
முதுநிலை பாதுகாப்பு அலுவலா் மொகைதீன் பிச்சை, பாதுகாப்புப் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ரயில்வே கடவுப் பாதையைக் கடக்கும் முன்பாக பொதுமக்கள் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், விதிகளை மீறுவோா் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த பிரசார வாகனம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி