மதுரை முனிச்சாலை சந்திப்பு பகுதியில் திருநங்கைகள் தொந்தரவால் மக்கள் அவதிபடுகின்றனர்.
மதுரை முனிச்சாலை சந்திப்பு பகுதி சிக்னலில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் சிக்னலில் நிற்கும் போது திருநங்கைகள் சுமார் நான்கு பேர் யாசகம் கேட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் யாரும் பணம் தரவில்லை என்றால் அவர்களை ஏசுவது, திட்டுவது, முறைத்து பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநங்கைகளின் இந்த போக்கு பொதுமக்களிடையே அதிருப்தியடைய செய்துள்ளது. இது தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையை போக்கி பொதுமக்கள் நிம்மதியாக அந்த வழியாக சென்று வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வழியாக தினமும் செல்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.