அபராதம் வீதிக்க பொதுமக்கள் கோரிக்கை

2646பார்த்தது
மதுரை மாநகர் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டி கோவில் சாலையில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகள்.

மதுரையில் உள்ள உலக புகழ்பெற்ற பாண்டி கோவிலில் தமிழகத்தில் இருந்து பல மாவட்ட பொதுமக்கள் காதுகுத்து, திருமணம் என பல சுப காரியங்கள் நடைபெறும். இந்த நிலையில் அங்கு சுற்றி உள்ள மகாலில் பொது மக்களுக்கு விருந்து வைத்த பின்னர் அவர்கள் சாப்பிட்ட இலைகளை சாலை ஓரத்தில் மஹால் உரிமையாளர்கள் கொட்டி செல்கின்றனர்.

இலைகளை சாலையோரம் கொட்டும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி