கோயில் விழாக்களில் ஜாதி, சமுதாய குழு பெயர் குறிப்பிடப்படக் கூடாது என்ற அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கு தொடர்பாக தமிழக அறநிலைய துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தஞ்சை ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது.