தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் கடந்த 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை (BT / BRTE) - நிரப்புவதற்கான அறிவிப்பாணையினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டு 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 4- ஆம் தேதி தேர்வு நடத்தியது.
இதில் ஏராளமான தேர்ச்சிபெற்றவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ள நிலையில் கலந்தாய்வு நடத்துவது தாமதமாகியுள்ளதால் வாழ்வாதாரம் இன்றி பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர்.
ஆனால் இதேபோன்று தேர்ச்சி பெற்று ஆதிதிராவிடப் பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் பலநாட்களுக்கு முன்பே பணியானை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் தேர்ச்சிபெற்ற பட்டதாரி தேர்வர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்தும் பேசியும் நீதிமன்ற வழக்கை காரணம்காட்டி கலந்தாய்வு நடத்தாமல் உள்ளதால் உடனடியாக 3192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்தி பணியானை வழங்குவதற்கு
பள்ளிக்கல்வித்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய கூறி பட்டதாரிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.