வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிஸீல் ஆக உள்ளது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா என. உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கோட் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், கோட் திரைப்படத்தை மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்களும் தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்குமாறு அட்வைஸ் செய்துள்ளார்.
இருப்பினும் அரசியல் வருகைக்கு பின் கோட் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகள் முன் பிரம்மாண்ட பேனர் உள்ளிட்டவைகளை ரசிகர்கள் அமைத்து வருகின்றனர்.
இந்நிலையில் திரையரங்குகள் முன் கோட் படத்திற்காக பேனர்கள் வைக்கப்படுவது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்ட போது, மதுரை மாநகராட்சியிடம் அனுமதியில்லாமல் பேனர்கள் வைக்கக்கூடாது.
சாலைகளில், பொதுமக்களுக்கு இடையூராக பேனர் வைக்க அனுமதி தரக்கூடாது என உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
அனுமதியின்றி பேனர் வைத்தால் மாநகராட்சி விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டால் அது கண்காணிக்கப்படும்.
பேனர் வைக்கப்படுவது குறித்து உரிய ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.