மதுரை: ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் - வடிவேலு பேட்டி

75பார்த்தது
மதுரை பீ. பீ. குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமான வரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது: வருமான வரித்துறை சார்பில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு நாளுக்கு முன்பு எனக்கு பொங்கல் வந்தது போல உள்ளது. மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது நடந்துவிட்டது, அதனை இங்கே சிறப்பாக கொண்டாடி விட்டேன். ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன். அது ஒன்றும் ஜாலியான விஷயம் தானே? வடிவேலு சொன்னதால் எதுவும் தப்பில்லை. ஏழை பாழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என்று சொன்னேன் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி