மதுரையில் அகில இந்திய விடுதலை சிங்கங்கள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை மற்றும் கட்சியின் 2ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் கட்சியின் நிறுவனத் தலைவர் வக்கீல் குமர தேசியம் சிறப்புரையாற்றினார். கட்சியை நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் விவசாய பொருட்களுக்கு குறைந்த பட்சம் விலை நிர்ணயம் செய்யவும் ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.