பாலக்காடு ரயில்கள் பாலக்காடு டவுன் வரை இயக்கம்

481பார்த்தது
பாலக்காடு ரயில்கள் பாலக்காடு டவுன் வரை இயக்கம்
மதுரை: பாலக்காடு ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அக்டோபர் 10 முதல் அக்டோபர் 29 வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு விரைவு ரயில் (22651) மற்றும் அக்டோபர் 11 முதல் அக்டோபர் 30 வரை பாலக்காட்டில் இருந்து புறப்பட வேண்டியது பாலக்காடு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (22652) ஆகியவை பாலக்காடு டவுன் மற்றும் பாலக்காடு ரயில் நிலையங்களுக் கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் அக்டோபர் 11 முதல் அக்டோபர் 29 வரை திருச்செந்தூரில் இருந்து புறப்படும் திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732) மற்றும் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 30 முதல் பாலக்காட்டில் இருந்து புறப்பட வேண்டிய பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) ஆகியவை பாலக்காடு டவுன் மற்றும் பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு டவுன் ரயில் நிலையம் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி