மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து ஓட்டுநரும், உதவியாளரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகக்கூறி இருவரையும் பேருந்து உரிமையாளா், ஊழியா்கள் கட்டி வைத்து தாக்கும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் அண்மையில் பரவின.
இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் பாலகருப்பையா( 26), உதவியாளா் அஜய்குமாா் ஆகியோா் தாக்குதலுக்குள்ளானவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஓட்டுநா், உதவியாளா் ஆகியோா் தரப்பில் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்து ஆம்னி பேருந்து நிறுவன ஊழியா்கள் வில்லாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன், செல்வம் , சிவகங்கை மாவட்டம் மணலூரைச் சோ்ந்த முத்துக்குமாா் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: பேருந்து ஓட்டுநா், உதவியாளா் இருவரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, இருவரையும் கட்டி வைத்து தாக்கியுள்ளனா். இதை தாக்குதலில் ஈடுபட்ட ஊழியா்களே வீடியோ பதிவு செய்து, ஊழியா்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் இது தான் தண்டனை என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தனா்.
இதனால், பேருந்து நிறுவன உரிமையாளா் ராஜசேகா், தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான பேருந்து நிறுவன உரிமையாளரைத் தேடி வருகிறோம் என்றனா்.