தல்லாகுளம் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் விவரங்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்ற உத்தரவு
மதுரை மண்டலத்தில் 8 மாவட்டங்களில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், மருத்துவமனைகள், சினிமா தியேட்டர்கள், அழகு நிலையங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தொழிலாளர் துறையிலும் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை தொழிகை பாதுகாப்பு மற்றும் சுகாதாரதுறையின் வெப் போர்ட்டலிலும்
labour. in. gov. in/ism) பதிவேற்றம் செய்து அனைத்து வெளிமாநில தொழிலாளர்களையும் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது. மேலும் அமைப்புசாரா தொழில்களில்
வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை தொழிவாளர் உதவி ஆணையர்கள் வெப் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது. வெளிமாநில தொழிலா ளர்களுக்கு ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, பணியிட விபத்துகள் ஏதும் ஏற்படின் உடனுக்குடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன். அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.