அக். 14ல் சைக்கிள் ரேஸ் மாணவர்கள் பங்கேற்கலாம்

191பார்த்தது
அக். 14ல் சைக்கிள் ரேஸ் மாணவர்கள் பங்கேற்கலாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து அக். , 14 காலை 6: 30 மணிக்கு சைக்கிள் ரேஸ் நடக்கிறது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 15 கி. மீ. , துாரம், மாணவிகள் 10 கி. மீ. , துாரம் சைக்கிள் ஓட்ட வேண்டும்.

15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 20 கி. மீ. , மாணவிகள் 15 கி. மீ. துாரம் சைக்கிள் ஓட்ட வேண்டும். இந்திய கைப்பிடி கொண்ட சைக்கிளுக்கு மட்டுமே அனுமதி. கியர், ரேஸ் சைக்கிள்களில் பங்கேற்கக்கூடாது. தலைமையாசிரியரிடம் இருந்து பெறப்பட்ட வயது சான்றிதழ், ஆதார் அட்டை நகல், பள்ளி எமிஸ் அடையாள அட்டையுடன் அக். , 11 முதல் 13 மாலை 6: 00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். முதல்பரிசு ரூ. 5000, 2ம் பரிசு ரூ. 3000, 3ம் பரிசு ரூ. 2000, 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ. 250 வழங்கப்படும். பதிவு செய்தபின் அக். , 14 காலை 6: 00 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு வரவேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி