பட்டாக்கத்தியுடன் வழிப்பறி செய்த ஒன்பது பேர் கைது.

767பார்த்தது
பட்டாக்கத்தியுடன் வழிப்பறி செய்த ஒன்பது பேர் கைது.
கரும்பாலை பகுதியில் பட்டாக்கத்தியுடன் வழிப்பறி செய்த ஒன்பது பேர் கைது.

மதுரை மாவட்டம் அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா. இவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம கும்பல்கள் பறித்து சென்றதாக புகார் வந்துள்ளது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி, வினோத்குமார், பாலசக்தி, ஹரி, விக்னேஷ், கார்த்தி, சோனைமுத்து, சித்திரவேல் உட்பட ஒன்பது பேர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து ஒன்பது பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி