மதுரை கோட்ட புதிய ரயில்வே மேலாளர் பதவியேற்பு

272பார்த்தது
மதுரை கோட்ட புதிய ரயில்வே மேலாளர் பதவியேற்பு
மதுரை கோட்ட புதிய ரயில்வே மேலாளராக சரத் ஸ்ரீ வத்சவா பதவியேற்பு மதுரை கோட்டத்தின் புதிய ரயில்வே மேலாளராக சரத் ஸ்ரீவஸ்தவா திங்கள் கிழமை அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பதவி ஆணைக்காக காத்திருக்கும் தற்போதைய கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாதன் அனந்த், சரத் ஸ்ரீவத்சவாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்த சரத் ஸ்ரீ வத்சவா அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டக்கல்வி பயின்றவர்‌. இவர் இந்திய ரயில்வே போக்குவரத்து பணி 1996 ஆண்டு பிரிவை சேர்ந்தவர். இவர் மதுரைக்கு வருவதற்கு முன்பாக புதுடில்லி ரயில்வே வாரியத்தில் பொது போக்குவரத்து வர்த்தக பிரிவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தார். இவர் வடக்கு ரயில்வேயில் மொரதாபாத் கோட்டத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராகவும், மத்திய ரயில்வே இணை அமைச்சரின் கீழ் இயங்கி வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி