மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட
்ட நியோ மேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் த
ுணை நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார்கள் அளிக்கப்பட்டன.
அதன்பேரில், நிர்வாக இயக்குநர்கள் கமலக்கண்ணன், பால சுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 100-க்கும்மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 40-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், நியோ மேக்ஸின் துணை நிறுவனமான க்ளைன் மேக்ஸ் நிறுவன இயக்குநரான, சிவகங்கை மாவட்டம் தமறாக்கி அருகிலுள்ள குமாரப்பட்டியைச் சேர்ந்த சம்பத் (42) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கிய நபரான இவரிடம், நிறுவனத்துக்குச் சொந்தமான சில சொத்து விவரங்களைச் சேகரித்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.