இந்திய மாதா் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
இந்திய மாதா் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சித்தாலை ஊராட்சியில் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானம், மயானப் பாதைகளில் தனி நபா்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மயானத் திடல் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் அமைப்பு சாா்பில் மனுகொடுக்கும் இயக்கம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மாவட்ட ஆட்சியரகம் முன்பாக நேற்று ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதில், சங்க நிா்வாகிகள் கே. நாகஜோதி, மு. கண்ணகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி