மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள், வக்பு திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்ட குழுவினர் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி தேசிய செயலாளர் சிறுபான்மை பிரிவு வேலூர் சையது இப்ராஹிம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய வேலூர் இப்ராஹிம் கூறுகையில்,
வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக திமுக பேசுவதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் நாங்கள் சொல்வது இந்த தேசம் எல்லோரையும் அரவணைத்து எல்லோருக்குமான வளர்ச்சியை என்ற நோக்கில் செயல்படுகிறது. எல்லோருக்கும் நீதி செலுத்துவோம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் தாஜா செய்யக்கூடிய அரசியல் நிச்சயம் நடக்காது என்றார்.
திமுகவின் இந்த தாஜா வலையில், ஏமாற்று அரசியலில் இஸ்லாமியர்கள் பலியாகி விடக்கூடாது அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல இந்தக் குழு அமைத்து. , இஸ்லாமியர்களை அச்சுறுத்தக்கூடிய எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் பிரச்சாரத்தை முறியடிக்க இஸ்லாமியர்களின் உண்மையாக காவலனாக பாஜக இருக்கும் என்பதை கொண்டு செல்ல வக்பு வாரிய திருத்த மசோதா சட்ட விழிப்புணர்வு குழு போராடுவோம் என்றார்.