மதுரை: முருக பக்தர்கள் மாநாடு; ஏற்பாட்டாளர்கள் பதிலளிக்க உத்தரவு

69பார்த்தது
மதுரை: முருக பக்தர்கள் மாநாடு; ஏற்பாட்டாளர்கள் பதிலளிக்க உத்தரவு
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஜூன் 12க்குள் முடிவெடுக்க காவல்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாடு மற்றும் 10 நாள் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் காவல்துறை மனுவை பரிசீலிக்கும் வரை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை செய்யலாம்; ஆனால் பூஜைகள் எதுவும் நடத்தக்கூடாது என நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், மதுரை முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான போலீஸ் கேள்விகளுக்கு ஏற்பாட்டாளர்கள் உரிய பதில் தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி