மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட
44 வது வார்டு சிமென்ட் ரோட்டில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இன்று (ஜூலை 31) நேரில் சென்று பார்வையிட்டு அங்கே சாப்பிட்டுவிட்டு சுகாதாரமாகவும், தரமாகவும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பூமிநாதன் எம்எல்ஏ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி மாயழகு, மதிமுக அவைத்தலைவர் தி. சுப்பையா, பகுதி செயலாளர் கோவிந்தன், மாநகராட்சி உதவி பொறியாளர் சூசை உள்ளிட்டோர் இருந்தனர்.