மதுரை கிழக்கு வட்டம், ம. சத்திரப்பட்டி ஊராட்சியில் ,
உள்ள அரசு மேல்நிலைப்
பள்ளியில் இன்று (29. 07. 2024) நடைபெற்ற விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி , 151 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள், மற்றும் பள்ளிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவிக்கையில்: -
தமிழ்நாடு முதலமைச்சர், மாணவ, மாணவிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள வசதி வாய்ப்பற்ற மாணவ, மாணவிகள் பெரும்பாண்மையாக அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இதற்கு மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வி கற்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது, அவர்களை
தொடர்ந்து, ஊக்கப்
படுத்துவதும், நமது கடமையாகும். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் மூலம் மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பயண அட்டை திட்டம், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், விலையில்லா சீருடை, பாடப்புத்தகம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சௌ. சங்கீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.