மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி திருவிழா கடந்த 15ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
8-ம் நாளான நேற்று இரவு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சித்திர வீதியில் உலா வந்தனர். சாமி உலாவை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு மீனாட்சி, அருள்மிகு சுந்தரேஸ்வரர் பிரியாவிடையை வழிபட்டு சென்றனர்.