கடல் போல் மாறிய மீனாட்சி அம்மன் கோவில் தெரு

75பார்த்தது
கடல் போல் மாறிய மீனாட்சி அம்மன் கோவில் தெரு
கடல் போல் மாறிய மீனாட்சி அம்மன் கோவில் தெரு

மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தளவாய் தெருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது போல் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் ஆபத்தான நிலையில் சாலையை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது இப்பகுதியில் முறையான மழை நீர் வடிகால் இல்லாததன் காரணமாக இது போன்ற நிகழ்வுகள் மழை காலங்களில் ஏற்படுவதாகவும் இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் இப்பாதையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மீனாட்சியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலைகளில் இதுவும் ஒன்று இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.

இந்த நிலையை மாற்ற அதிகாரிகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி