மதுரை மாவட்ட சரக காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஒருவர் அவரின் குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி ஆபாசமாகவும் அருவறுக்கத்தக்க வகையிலும் சமூக வலைதளங்களான 'X' தளத்திலும் மற்றும் Telegram-லும் பதிவிட்டுள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் இயங்கி வரும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
குற்றச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களை திருடி அதில் பெர்களின் புகைப்படங்களை ஆபாசமாகவும் அருவறுக்கத்தக்க வகையிலும் சமூக வலைதளங்களான 'X' தளத்திலும் மற்றும் Telegram-லும் பதிவிட்டிருப்பது உண்மை என தெரியவந்தது.
மேற்கொண்டு தொடர் விசாரணை செய்த சைபர் கிரைம் போலீசாருக்கு மேற்படி ஆபாச பதிவை பதிவு செய்த நபர் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் என்பது தெரியவந்தது. மேற்படி எதிரியை தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன், சிம்கார்டுகள் மற்றும் இன்டர்நெட்க்கு பயன்படுத்திய மோடம் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.