மதுரை இரயில் நிலையத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் இரயில் நிலையத்தில் வேலை செய்யும் டூலா மாஞ்சி மற்றும் அவரது நண்பர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சென்று தரிசனம் செய்ய வந்தவர்கள் தனது மொபைல் போனில் சார்ஜ் போடலாம் என எண்ணி நடைமேடை எண் - 1 ல் உள்ள சார்ஜிங் பாயிண்ட்டில் சார்ஜ் போட்டு விட்டு அருகிலேயே உள்ள சேரில் அமர்ந்து தூங்கிவிட்டார்கள்.
இதை பார்த்து நோட்டமிட்டு வந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் வசிக்கும் வர்கீஸ் என்பவரின் மகன் ராஜேஷ் வயது 30 என்பவர் திருடிவிட்டு ஓடிவிட்டான். இதன் சிசிடிவி கேமரா பயன்படுத்தி திருடிய நபரை தேடிவந்த எஸ்.ஐ. கேசவன் மற்றும் காவலர்கள் அந்த திருடனை பஸ் நிறுத்தம் அருகே வைத்து பிடித்து விசாரணை செய்து திருடிய இரண்டு செல்போன்களையும் கைப்பற்றி திருடனை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். திருடிய செல்போன் மற்றும் திருடனை சிறிது நேரத்தில் கண்டுபிடித்த காவலர்களை மதுரை இரயில் நிலையம் காவல் ஆய்வாளர் ஜெயபிரிட்டா பாராட்டினார்கள்.