மதுரை: விஷத்த கொடுத்துருங்க செத்துறோம்; குடும்பத்தினர் வேதனை

70பார்த்தது
மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த
மகேஷ்பாண்டி ( 25) மாடு பிடித்தபோது இடது நெஞ்சில் மாடு குத்தியதில் படுகாயமடைந்து நேற்று உயிரிழந்தார்.

அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் ஆறுதல் கூட தெரிவிக்காத நிலையில் உயிரிழந்த மாடுபிடி வீரரான பட்டதாரி இளைஞர் மகேஷ்பாண்டியின் குடும்பத்தினர் உரிய இழப்பீடு வழங்க கோரியும், அரசு பணி வழங்க கோரியும் அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய மகேஷ்பாண்டியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ;-

முதலமைச்சர் பிறந்தநாள் எனக்கூறி வாரந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி இளைஞர்களை கொன்று குவிக்கிறார்கள் முதலமைச்சரின் பிறந்தநாள் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடைபெறும் என கருதி தான் எனது அண்ணன் போட்டிக்கு சென்றான் ஆனால் எங்கள் அண்ணன் உயிரிழந்து விட்டார்.

முதலமைச்சர் பிரியாணியை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். நாங்கள் பச்சை தண்ணீர் கூட இல்லாமல் அண்ணனை இழந்து தவிக்கிறோம், எங்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விடுங்கள் என வேதனையை தெரிவித்தனர்.

எங்களுக்கு ஏதேனும் இழப்பீடு தர வேண்டும் எனவும் தெரிவித்தனர் முதலமைச்சர் பிறந்தநாள் என்றால் எவ்வளவோ போட்டிகள் இருக்கும் போது வாரந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி இளைஞர்களை கொன்று குவிப்பது ஏன் என பெண்கள் கேள்வி எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி