மதுரை: விசிக துணை பொதுச்செயலாளர் பரபரப்பு பேச்சு

65பார்த்தது
மதுரை மாநகரில் திருமணவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திருமண மேடையில் பேசியபோது: தலித் அரசியல் என்பது ஒரு சாதிய அரசியல் அல்ல, மனித இனத்திற்கான அரசியல்; வலதுசாரி, இடதுசாரி என பேசக்கூடியவர்கள் கூட ஆணவ படுகொலையை பற்றி பேச மறுப்பது இந்த சமூகத்தின் மிகப்பெரிய துர்பாக்கியம். 

தலித் இளைஞர்கள் அமெரிக்காவிலும் லண்டனிலும் படிப்பதற்கு நாம் என்ன திட்டத்தை உருவாக்க போகிறோம் என்கின்ற பல திட்டங்களுடன் எங்களுடைய பயணத்தை நாங்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயக்கம் உணர்வுபூர்வமானது. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தன் உரிமையைக் கேட்கும்போது அதற்கான விமர்சனங்களும் அதற்கான பிரச்சினைகளும் எழும் என்பது எனக்கு எப்போதே தெரியும். இப்போது நிறைய பேர் என்னுடைய ஜாதிப் பெயரைச் சொல்லிப் பேசுகிறார்கள். 

எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது. இது பெரியார் அம்பேத்கருடைய இயக்கம். ஒரு எம்எல்ஏ எம்பி ஆக உருவாக நான் வரவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு பிரச்சாரத்தை உருவாக்கத்தான் நான் இங்கு வந்தேன். நான் புதிதாக வந்திருந்தாலும் தோழர்களுடைய ஆதரவோடு இயக்கத்தை வலிமையானதாக எப்போதும் திருமாவளின் பாதையில் பயணம் செய்வோம். நமக்கான குறிக்கோளை அடைவோம். நமக்கான பயணத்தை புரட்சியாளர் அம்பேத்கர் பெரியார் வழியில் அடைவோம் என்று பேசினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி