மதுரை: மூதாட்டியின் எரிந்த தலை - சாலையில் கிடந்ததால் பரபரப்பு

68பார்த்தது
மதுரை திருப்பாலை காவல்நிலையம் அருகேயுள்ள வாசுநகர் எதிர்புறம் நத்தம் சாலையின் நடுவே நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்களில் ஒருவர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற தல்லாகுளம் காவல்துறையினர் சாலையில் கிடந்த தலையை மீட்டு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மோப்பநாய் உதவியுடன் தலை கிடந்த சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் உடலை தேடிவந்தபோது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தலை பாதி எரிக்கப்பட்ட நிலையில் நாய் இழுத்து வந்துள்ளது தெரியவந்தது. அருகிலுள்ள நாகனாகுளம் மயானத்தில் நேரில்சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் மதுரை நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடல் நேற்று முன்தினம் எரியூட்டபட்ட போது மழை பெய்துள்ளது இதனால் குடும்பத்தினர் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் தலை மட்டும் பாதி எரிந்த நிலையில் இருந்ததை மயான ஊழியர்கள் பார்க்காமல் விட்டுள்ளனர்.

இதையடுத்து மயானத்தில் இருந்து நேற்று நாய் பாதி எரிந்த நிலையில் கிடந்த தலையை இழுத்து வந்து சாலையில் போட்டது தெரிய வந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி