மதுரை மாநகர் பீ. பி. குளம் முல்லை நகர் , நேதாஜி மெயின்ரோடு, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு ஆகிய பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன்ன. இது தொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே தேர்தல் காலத்தில் முல்லைநகர் பகுதி மக்களுக்கு ஆளும் கட்சியினர் தங்கள் பகுதிக்கு பட்டா வழங்குவதாக அளித்த வாக்குறுதியான தங்கள் பகுதியை நீர்நலை பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதியாக வகைமாற்றம் செய்து பட்டா வழங்க கோரி முல்லை நகர் பகுதி மக்கள் 8 நாட்களாக தொடர்ந்து தெருக்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லை நகர் பகுதி மக்களை பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கத்தினரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜய் உத்தரவுப்படி வடக்கு மாவட்ட தலைவர் கல்லாணை தலைமையிலான தவெக நிர்வாகிகள் முல்லை நகர் பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.