மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003 - 2005 கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவ மாணவியர்கள் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். ஒத்தக்கடை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் தாங்கள் படித்த பள்ளியை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். 2003-05 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து புத்தாண்டு தினமான நேற்று பள்ளியில் உள்ள குப்பைகளை அகற்றி சேதமடைந்த பொருட்களை சீரமைத்ததோடு மட்டுமல்லாமல் பள்ளி வளாகத்தை முழுவதுமாக தூய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட்டனர்.