மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மாடியில் நேற்று மாலை ஆசிரியர் முன்பாக விளையாடிகொண்டிருந்தபோது அகிலன் (10) என்ற 5ஆம் வகுப்பு மாணவன் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கு வந்த பழங்காநத்தம் பகுதி திமுக மாமன்ற உறுப்பினர் சுதனை முற்றுகையிட்டு மாணவனின் உறவினர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
தனது மகனுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றி தர வேண்டும் எனவும், என்ன நடந்தது என விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.