மதுரை: ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா

57பார்த்தது
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரின் ஆராதனை விழாவினை முன்னிட்டு 5 பேருக்கு ஸ்ரீ மஹா பெரியவா விருது வழங்கப்பட்டது. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகளின் ஆராதனை விழா மதுரை எஸ்.எஸ். காலனி, பிராமண கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறந்து திகழும் மதுரை வைதிக சமாஜம் ஆலோசகர் பிரம்மஸ்ரீ அருணாசல வாத்யார், பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன், எழுத்தாளர் பி. திருமலை, ஆன்மிக கட்டுரையாளர் ஆரணி பவித்ரா நந்தகுமார், சமூக ஆர்வலர் பாலா ராமச்சந்திரன் ஆகியோருக்கு 'ஸ்ரீ மஹாபெரியவா விருது' வழங்கப்பட்டது. 

இதனை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கி வாழ்த்துரை வழங்கி பேசினார். தொடர்ந்து 'கலைமாமணி' நாகை முகுந்தன் 'கோதையும் கோபாலனும்' என்கிற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். 27ஆம் தேதி மகா பெரியவர் ஆராதனை வைபவத்தை முன்னிட்டு, காலை 9 மணிக்கு 'காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர்' விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், மகன்யாஸம், புஷ்பாஞ்சலி, சிறப்பு அர்ச்சனையும் நடக்கிறது. பிரார்த்தனைகளுக்காக அர்ச்சனையில் பங்குபெற்று பிரசாதம் பெற்றுக் கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி