வளைகுடா நாடுகளில் இன்றைய தினம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மதுரையில் சில இடங்களில் இஸ்லாமியர் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதனடிப்படையில் மதுரை மாவட்ட JAQH(ஜாக்) அமைப்பின் சார்பில் இஸ்லாமியர்களின் தியாகதிருநாள் எனும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் ஏராளமான சிறுவர்கள், பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர். சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட பின்னா் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்..
தொழுகையின் முடிவில் இஸ்லாமிய பேச்சாளர்கள் பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்ததோடு உலக நன்மை வேண்டி சிறப்பு துஆ செய்தனர்.
இதனை தொடர்ந்து இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும்வகையில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்குவழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.