மதுரையில் நாளை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ள நிலையில், நாளை காலை 11:00 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மோப்ப நாய்க்குண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதால் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.