மதுரை: சாலைகளில் சூழ்ந்த மழைநீர் - மக்கள் அவதி

56பார்த்தது
மதுரையில் அதிகாலை முதலே ஒரு மணி நேரமாக பரவலான மழை பெய்து வருகிறது. மாநகர பகுதியிலான கீழமாசி வீதி கோரிப்பாளையம் தல்லாகுளம் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதன் காரணமாக வெத்தலை பேட்டை பகுதியில் மழை சாலைகளில் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

மேலும் பல்வேறு பகுதிகளிலும் பரவலான மழை பெய்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலான பெய்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கிய நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து தேங்கியமழை நீரை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி