திமுக அரசு ஊழியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனாலும் எந்த அறிவிப்புகளையும் வெளியிடமால் தொடர்ந்து அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றிவருகிறது. மேலும் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பழைய பென்சன் திட்டம் தொடர்பாக ஆய்வுக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ஆய்வுக்குழு அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திமுக அரசின் வின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் பழைய பென்சன் திட்டத்தை ஆய்வு செய்ய புதிதாக மீண்டும் அமைத்த மூவர் குழுவைத் திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும், பணிக் கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தேர்தல் வாக்குறுதிபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி பாதாகைகள் ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் ஆட்சியர் அலுவலக வாயில் வரை பேரணியாக வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.