மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசிதிபெற்ற முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன.
இந்நிலையில் தர்ஹா நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்குகளில் முறைகேடு நடைபெறுவதாகவும், கணக்குகளை பட்டியலிடுவது குறித்தும் வக்பு வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து வக்பு வாரியத்தில் பள்ளிவாசல் ஜமாத் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் தர்கா மற்றும் மினாநூர்தீன் பள்ளிவாசல் நிர்வாகத்தை வக்பு வாரியம் நேரடியாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாக முகையதீன் ஆண்டவர் தர்ஹா ஜமாத் நிர்வாக அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு ஜமாத் நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டது.
தனி நபர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது தெற்கு வாசல் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.
இதனையடுத்து தெற்கு வாசல் தர்காவை கையகப்படுத்துவதற்காக முயற்சிக்கும் வக்பு வாரிய நிர்வாகத்தை கண்டித்தும் தெற்குவாசல் தர்ஹா மினராவில் (கோபுரம்) ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வக்புவாரியம் மற்றும் காவல்துறைக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க வைத்தனர்.