நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் குறித்து பெரியார் பேசியதாக, அவமதிக்கும் வகையிலான கருத்துகளை சீமான் சில தினங்களுக்கு முன் பேசி இருந்தார்
அப்போது பல்வேறு கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாநகர் முழுவதிலும் திராவிடர் பெரியார் கழகம் சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சனம் செய்து போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர் அதில் "சினிமா நடிகையை சீரழித்து ஏழு முறை கரு கலைப்பு செய்த காம வெறியன் சீமானே தரம் தாழ்ந்த அரசியல் செய்யாதே! , தமிழ்நாடு உன்னை மன்னிக்காது", என விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏப்படுத்தியுள்ளது.